அதிக வெயில் : 2 நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு!
வெப்பத்தால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க, காலை 10 மணி முதல், மாலை 4 மணி வரை, யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக வெயில்
ஈரானில் வரலாறு காணாத வகையில் வெயில் வாட்டி வருவதால், பொதுமக்களின் நலன் கருதி 2 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க, காலை 10 மணி முதல், மாலை 4 மணி வரை, யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் பல ஆபத்துகள் நிகழக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகி வருகிறது.
தற்போது மேற்கு ஆசிய நாடான ஈரானில் வெப்பம் கொளுத்தி வருகிறது. அந்நாட்டின் அஹ்வாஸில் நகரில் இந்த வாரம் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் வெயிலின் தாக்கத்தை அதிகளவில் எதிர்கொள்கின்றனர்.
இத்தகைய சூழலில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு ஆக.02, 03 ஆகிய திகதிகளில் விடுமுறையை அறிவித்துள்ளது.