101 மீட்டருக்கு சிக்ஸரை பறக்கவிட்ட தோனி... இமாலய சிக்ஸர்!
இப்போட்டியின் போது சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடித்த சிக்ஸர் ஒன்று 101 மீட்டருக்கு பறந்தது.

ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் ஜடேஜா - மொயீன் அலி கூட்டணி இணைந்து அடுத்த சில ஓவர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் அதிரடியாக விளையாடிய மோயின் அலி, ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து கையோடு 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனி அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
குறிப்பாக் இப்போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் தோனி ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸரை விளாசி மிரளவைத்தார்.
கடைசி ஓவரிலும் அபாரமன ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி அந்த ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 57 ரன்களும், கடைசி நேரத்தில் வந்த தோனி 9 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 28 ரன்களையும் விளாசினர்.
இந்நிலையில் இப்போட்டியின் போது சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடித்த சிக்ஸர் ஒன்று 101 மீட்டருக்கு பறந்தது.
அதன்படி இன்னிங்ஸின் கடைசி ஓவரை யாஷ் தாக்கூர் வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை மகேந்திர சிங் தோனி மிட் விக்கெட் திசையில் இமாலய சிக்ஸரை பறக்கவிட்டார்.
அந்த சிக்ஸரானது 101 மீட்டருக்கு சென்றது பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.