GovPay உட்பட 3 புதிய டிஜிட்டல் அணுகல்களை இன்று அறிமுகம்

GovPay வசதி உட்பட 03 புதிய டிஜிட்டல் அணுகுமுறைகளின் அறிமுகம் இன்று (07) நடைபெறவுள்ளது.

பெப்ரவரி 7, 2025 - 11:43
GovPay உட்பட 3 புதிய டிஜிட்டல் அணுகல்களை இன்று அறிமுகம்

அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் முறையின் ஊடாக மக்கள் மேற்கொள்ளும் வகையில், GovPay வசதி உட்பட 03 புதிய டிஜிட்டல் அணுகுமுறைகளின் அறிமுகம் இன்று (07) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் முறையின் ஊடாக மக்கள் மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார விவகார பிரதியமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவிக்கையில்,

"தற்போது, ​​16 அரச சேவைகளுக்கு இந்த கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 30 சேவைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என நம்புகிறோம். இதன் மூலம் செலுத்தும் கட்டணத்தை 15 ரூபாயாக குறைக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!