உயர்தர மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்

அதிகபட்சமாக 08 இலட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

ஜுலை 8, 2024 - 22:06
உயர்தர மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்

2022ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர வட்டியில்லா கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தரத்தில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்காக இந்த வட்டியில்லாக் கடன் திட்டம், வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதில் அதிகபட்சமாக 08 இலட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

முன்னதா 7 தொகுதிகளின் கீழ், கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட 17 அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் 100 பட்டப்படிப்புகளை தொடர 17,313 மாணவர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் இந்தக் கடன் திட்டத்தின் எட்டாவது தொகுதியாக உள்வாங்கப்படவுள்ளனர்.

அது தொடர்பில் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படவுள்ள உத்தேச கற்கைநெறிகள் தொடர்பான முன்மொழிவுகள் தற்போது கோரப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும், தெரிவித்துள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!