சிறுநீர் கழித்த பெண்ணுக்கு அயல் வீட்டாரால் வழங்கப்பட்ட மனிதாபிமானமற்ற தண்டனை

குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 18, 2023 - 12:52
சிறுநீர் கழித்த பெண்ணுக்கு அயல் வீட்டாரால் வழங்கப்பட்ட மனிதாபிமானமற்ற தண்டனை

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள ஒரு பெண் தனது வீட்டின் அருகே சிறுநீர் கழித்ததற்காக அயல் வீட்டாரால் கொடூரமாக தாக்கப்பட்ள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான 35 வயதுடைய பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அயலவர்கள் பெண்ணின் அந்தரங்கப் பகுதியை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், இதனால் அவர் மயக்கமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
 
குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!