நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் குறித்து வெளியான தகவல்
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்துக்கு முரணானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமைகள் மனுக்கள் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.