அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவைகளில் நிலவி வரும் சம்பள முரண்பாடுகளை களைவதற்கான ஆரம்ப ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சர் சந்தன அபேரட்ன தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்க கோரிக்கை, கடந்த அரசாங்கங்களின்தீர்மானங்கள் போன்ற காரணங்களால் அரச சேவை கடுமையான சம்பள முரண்பாட்டு நிலைமை நீடித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
1992ஆம் ஆண்டு முதலே சில சேவைகளில் சம்பள முரண்பாடு நிலவி வருவதுடன், அரச ஊழியர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் சம்பள முரண்பாடுகளை நீக்குவது சவாலான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.