அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு
அஸ்வெசும கொடுப்பனவு : இதற்கமைய 799.5 மில்லியன் ரூபாய் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும பயனாளர்களில் உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 113,713 பேருக்கு ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவான 709.5 மில்லியன் ரூபாய் வங்கி கணக்குகளில் வைப்பிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் அந்த பணத்தினை வரவு வைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர் x சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 1,162,245 பயனாளி குடும்பங்களுக்கு ஜூலை மாதத்துக்காக இதுவரை 7,278 மில்லியன் ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான ஆராய்வு நடவடிக்கை நிறைவடைந்ததன் பின்னர் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.