சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்!
“மோசடி மற்றும் ஊழலைத் தடுக்கும் வகையில் இ - மோட்டாரிங் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகன போக்குவரத்துத்து திணைக்களம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான அனுமதியை நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது” என, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 10,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளதுடன், எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.