இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம் – தீவிர தேடுதல் பணி
இந்தோனேசியாவில் 11 பேருடன் பயணித்த ATR 42-500 வகை விமானம் காணாமல் போனதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவில் 11 பேருடன் பயணித்த ATR 42-500 வகை விமானம் காணாமல் போனதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்காசர் நகருக்கு அருகிலுள்ள பகுதியில் விமானம் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து விமானம் மாயமானதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன இந்த விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. விமானத்தின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகாத நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

