நுவரெலியாவில் உயிரிழந்த இந்திய சுற்றுலாப் பயணி 

நுவரெலியாவை பார்வையிட வந்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார் .

ஏப்ரல் 26, 2023 - 19:17
நுவரெலியாவில் உயிரிழந்த இந்திய சுற்றுலாப் பயணி 

நுவரெலியாவை பார்வையிட வந்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார் . உயிரிழந்த இந்திய  பிரஜை 68 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது மனைவியுடன் கடந்த 23 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். இந் நிலையில் நேற்று (25) நுவரெலியாவுக்கு  வந்து மாலை 6:30  மணியளவில் தங்கியிருந்த  விடுதியில் இருந்து பிரதான நகருக்கு இரவு உணவு உண்பதற்காக சென்று கொண்டிருந்த போது, திடீரென சுகயீனம்  ஏற்பட்டுள்ளது.

அவர், உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு  கொண்டுசெல்ப்பட்டார்.  எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு  முன் மரணித்துவிட்டதாக  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!