சுனில் கவாஸ்கர் வாழ்நாளில் ஹெல்மெட் அணிந்ததே இல்லை.. ஏன் தெரியுமா? 

கிரிக்கெட்டை இங்கிலாந்து கண்டுபிடித்தாலும், அதனை 1970களுக்கு பின் ஆட்சி செய்தது வெஸ்ட் இண்டீஸ் தான்.  வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர்களின் எழுச்சி, விவியன் ரிச்சர்ஸ்-ன் தாக்குதல் பாணி ஆட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. 

ஜுலை 10, 2023 - 19:59
சுனில் கவாஸ்கர் வாழ்நாளில் ஹெல்மெட் அணிந்ததே இல்லை.. ஏன் தெரியுமா? 

கிரிக்கெட்டை இங்கிலாந்து கண்டுபிடித்தாலும், அதனை 1970களுக்கு பின் ஆட்சி செய்தது வெஸ்ட் இண்டீஸ் தான்.  வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர்களின் எழுச்சி, விவியன் ரிச்சர்ஸ்-ன் தாக்குதல் பாணி ஆட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம். ஆனால் அப்படியான வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களையே திரும்பி பார்க்க வைத்த பெருமை சுனில் கவாஸ்கருக்கு மட்டுமே உண்டு. 1970,80 களில் கிரிக்கெட் பார்த்து ரசிகர்கள் பலரும் சுனில் கவாஸ்கர் ஆட்டமிழந்தால், ரேடியோவை ஆஃப் செய்துவிடுவார்கள். 

வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷம், பவுன்சர், ஸ்விங், வேகம் என்று அத்தனையையும் சமாளிக்க இந்திய அணியில் அப்போது யாரும் கிடையாது. அந்த நேரத்தில் தான் சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டில் கால் பதித்தார். சுனில் கவாஸ்கரின் அறிமுகமே வெஸ்ட் இண்டீஸில் தான். 

அறிமுகமான முதல் போட்டியிலேயே 65 ரன்களை விளாசினார் சுனில் கவாஸ்கர். அந்த தொடரில் மட்டும் 4 போட்டிகளில் ஒரு இரட்டை சதம், 3 சதங்கள், 2 அரைசதங்கள் என்று 774 ரன்களை விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

இன்னொரு அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால், உலகமே அஞ்சிய வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சுனில் கவாஸ்கர் ஹெல்மெட்டை பயன்படுத்தவே இல்லை என்பது தான். சுனில் கவாஸ்கர் ஹெல்மெட் அணிந்தவாறு எந்த புகைப்படமும் இணையத்தில் கிடையாது. 

ஏனென்றால் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் சுனில் கவாஸ்கர் ஹெல்மெட் அணிந்ததே இல்லை. இன்று விராட் கோலி களத்தில் காட்டிய ஆக்ரோஷத்தை, எந்தவித பாதுகாப்பும் இன்றி அன்றே வெளிப்படுத்தியவர் சுனில் கவாஸ்கர்.

இன்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் விளாசுவது சாதனையாக பார்க்கப்பட்டு நிலையில், 1980களிலேயே 10 ஆயிரம் ரன்களை விளாசி சாதனை படைத்தவர். 

“சுனில் கவாஸ்கர் ஆடிய கிரிக்கெட் சச்சின் இதுவரை ஆடவில்லை. சச்சின் கிரிக்கெட்டை தொடங்கியதே சுனில் கவாஸ்கரை பார்த்துதான். ஆக்ரோஷத்திற்கு பெயர்போன சுனில் கவாஸ்கர், இந்திய அணியை ஆக்ரோஷமாக விமர்சிப்பது ஏன் என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்” - சுனில் கவாஸ்கர் பற்றி பாகிஸ்தான் ஜாம்பவான் இம்ரான் கான் சொன்ன வார்த்தைகள் இவை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!