17வது முறையாக சாதனை படைத்த இந்திய அணி..  ஹாரி ப்ரூக் அதிரடி வீணானது!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

பெப்ரவரி 1, 2025 - 12:24
17வது முறையாக சாதனை படைத்த இந்திய அணி..  ஹாரி ப்ரூக் அதிரடி வீணானது!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இரண்டு அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் பண்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. 

முதலில் களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன்னில் வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த திலாக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள்.

மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 19 பந்துகளில் 29 ரன்கள் குவிக்க, மிடில் வரிசையில் களமிறங்கிய ரிங்கு சிங் 26 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் குவித்தார். 

பின்னர் சிவம் துபே உடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா கூட்டணி 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய ஹர்த்திக் பாண்டியா 30 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் என 53 ரன்கள் குவித்தார். 

மறுமுனையில் சிவம் துபே 34 பந்துகளில் 53 ரன்கள் குவிக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது.

பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் சால்ட் மற்றும் பென் டக்கட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி ஆறு ஓவர்களில் 62 ரன்கள் குவித்தது. 

இதில் சால்ட் 23 ரன்னில் அக்சார் பட்டேல் பந்துவீச்சில் வெளியேற மறுமுனையில் டக்கெட் 19 பந்துகளில் அதிரடியாக விளையாடி 39 ரன்கள் குவித்து வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய கேப்டன் பட்லர் 2 ரன்னில் ரவி பிஷ்ணாயின் பந்துவீச்சில் வெளியேறினார்.

ஹாரி புரூக் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 51 ரன்கள் குவித்த நிலையில் வருண் சக்கரவர்த்தி அவரை வீழ்த்தினார். 

பின்னர் களம் இறங்கிய லிவிங்ஸ்டன் 9 ரன் மற்றும் ஜேக்கப் பெத்தல் 6 ரன் ஆகியோரை சிவம் துபெவுக்கு பதிலாக மாற்று வீரராக களம் இறங்கிய ஹர்சித்ராணா வீழ்த்தினார். 

இறுதியாக இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன், தொடர்ந்து 17வது முறையாக டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!