இந்திய அணியில் யாருக்கு இடம்.. கோலி இடத்திற்கு யார்?

உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இதுவரை வாய்ப்பு கிடைக்காத ஸ்ரேயாஸ் போன்ற வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

செப்டெம்பர் 21, 2023 - 10:51
இந்திய அணியில் யாருக்கு இடம்.. கோலி இடத்திற்கு யார்?

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டனாக கேஎல் ராகுலும் துணை கேப்டனாக ஜடேஜாவும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இதுவரை வாய்ப்பு கிடைக்காத ஸ்ரேயாஸ் போன்ற வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

மேலும் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் போன்ற முக்கிய வீரர்களுக்கு முதல் இரண்டு ஆட்டங்களில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. 

இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? கே எல் ராகுல் எந்த இடத்தில் பேட்டிங் செய்வார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். 

என்னாது... இந்தியா - பாக். உலகக்கோப்பை போட்டி நியூயார்க்கில்.. ஐசிசி அதிரடி முடிவு!

ரோகித் சர்மா இல்லாததால் இந்த போட்டியில் இஷான் கிசனும் சுப்மன் கில்லும் தான் தொடக்கவீராக களம் இறங்குவார்கள்.

இதேபோன்று மூன்றாவது வீரராக விராட் கோலி இடத்தில் திலக் வர்மா களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. நம்பர் நான்காவது இடத்தில் கேப்டன் கே எல் ராகுல் களமிறங்க உள்ளார். 

உலகக் கோப்பை தொடரில் அவர் இந்த இடத்தில் தான் விளையாட இருக்கிறார். இதனால் ஆஸ்திரேலிய தொடரிலும் நம்பர் நான்காவது வீரராக கேல் ராகுல் விளையாடுவார்.

நம்பர் ஐந்தாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஆறாவது இடத்தில் சூரியகுமார் யாதவும் களமிறங்க கூடும். நம்பர் ஏழாவது இடத்தில் ஜடேஜாவும் நம்பர் எட்டாவது இடத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினும் விளையாட உள்ளனர்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்றால் பும்ரா, சிராஜ் மற்றும் முகமது சமி ஆகியோர் களமிறங்க கூடும். அதுவே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் என்றால் முகமது சமிக்கு பதில் தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

இந்திய அணி பிளேயிங் லெவன் : 1, சுப்மன் கில், 2, இஷான் கிஷன், 3, திலக் வர்மா, 4, கேஎல் ராகுல், 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, சூர்யகுமார் யாதவ், 7, ஜடேஜா, 8, அஸ்வின், 9, வாசிங்டன் சுந்தர் / முகமது ஷமி, 10. முகமது சிராஜ், 11, பும்ரா

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!