காயத்திலிருந்து திரும்பிய பிறகு சதம்.. கேஎல் ராகுலின் மாஸ் கம்பேக்.. பாக். எதிராக ரன் குவிப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 லீக்கு ஆட்டத்தில் காயத்திலிருந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

செப்டெம்பர் 11, 2023 - 22:18
காயத்திலிருந்து திரும்பிய பிறகு சதம்.. கேஎல் ராகுலின் மாஸ் கம்பேக்.. பாக். எதிராக ரன் குவிப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 லீக்கு ஆட்டத்தில் காயத்திலிருந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கு கே.எல். ராகுல் தேவையா அவர் காயத்தில் இருந்து வந்திருக்கிறார் அவர் எப்படி சரியாக விளையாடுவார் என பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.

இதற்கு அனைத்திற்கும் இன்று தன்னுடைய பேட்டிங் மூலம் கே எல் ராகுல் பதிலடி கொடுத்திருக்கிறார். குறிப்பாக பாகிஸ்தான அணி பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை கொண்டது. 

அவர்களுக்கு எதிராக காயத்திலிருந்து திரும்பி விளையாடுவது என்பது சாதாரண காரியம் கிடையாது. ஆனால் அதனை ஒரு கேக் வாக் போல் ராகுல் செய்து இருக்கிறார்.

147 ரன்கள் இரண்டு விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி இன்றைய நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. முதல் மூன்று ஓவர் வரை கே எல் ராகுலும் விராட் கோலியும் பொறுமை காத்தனர். 

அதன் பிறகு மழை மேகங்கள் சூழ்ந்ததால் வேகமாக ரன் அடிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து கொண்ட இருவரும் அதிரடியை காட்டினர்.

ஹிட்மேன்னா சும்மாவா? கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

ஒரு முனையில் கோலி தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் கே எல் ராகுல் பட்டையை கிளப்பினார். இவ்வளவு நாள் என்னப்பா செஞ்சிட்டு இருந்த தங்கம் என்பது போல் ராகுல் பவுண்டரியையும், சிக்ஸரையும் அடித்து நொறுக்கினார். 

குறிப்பாக ஷாகின் அப்ரிடி, பஹிம் அஷ்ரப், சதாப்கான் இப்திகார் அஹ்மத் ஆகியோர் ஓவர்களை கே எல் ராகுல் தெறிக்க விட்டார்.குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களை இறங்கி வந்து சிக்ஸர்களை பறக்க விட பாகிஸ்தான் அணி செய்வது அறியாது திணறியது.

தொடர்ந்து அதிரடி காட்டிய கேஎல் ராகுல், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 6வது சதத்தை பூர்த்தி செய்தார். இவரையா இவ்வளவு நாள் நாம் விளையாட வேண்டாம் என்று சொன்னோம் என விமர்சகர்களை மனதில் நினைக்கும் அளவிற்கு கே எல் ராகுல் கொளுத்தி விட்டார். 

கே எல் ராகுலின் இந்த இன்னிங்ஸ் அவர் பார்மில்தான் இருக்கிறார் என்பது காட்டுகிறது. கே எல் ராகுலின் இந்த பேட்டிங் மூலம் இந்திய அணியின் பலம் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. மேலும் இந்திய ரசிகர்களுக்கும் மனதளவில் திருப்தியை கொடுத்திருக்கிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!