கேரளா நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதுடன், கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. 

ஜுலை 30, 2024 - 16:27
ஜுலை 30, 2024 - 16:36
கேரளா நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதுடன், கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. 

அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. 

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. 

அட்டமலையில் இருந்து முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதனால், தனித்தீவில் சிக்கியது போல 500 வீடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டிக்கொண்டனர். 

இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பலரின் நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!