2007, 2019  டிராவிட், கோலிக்கு என்ன ஆச்சுனு மறக்காதீங்க.. எச்சரிக்கும் கம்பீர்

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ளது. 5ஆம் திகதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர், நவ.19ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 

செப்டெம்பர் 21, 2023 - 22:07
2007, 2019  டிராவிட், கோலிக்கு என்ன ஆச்சுனு மறக்காதீங்க.. எச்சரிக்கும் கம்பீர்

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ளது. 5ஆம் திகதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர், நவ.19ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 

மொத்தமாக 10 அணிகள், 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதி போட்டிகள், இறுதிப் போட்டி என்று தொடர் நடக்கவுள்ளது. இதற்காக 10 மைதானங்கள் சிறப்பாக தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணி விளையாட உள்ள 9 லீக் போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடக்கவுள்ளன. இந்திய அணி அக்.8 தங்களின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. அதன்பின் அக்.14 அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.

இதற்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதே அணியுடன் ஆசியக் கோப்பையை கேப்டன் ரோகித் சர்மா வென்றார். ஆசியக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றதன் மூலமாக ரோகித் சர்மா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

கேப்டனாக ஆசியக் கோப்பையை வென்றதை போல், உலகக்கோப்பையையும் வெல்வாரா என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தான் ரோகித் சர்மா கேப்டன்சிக்கு வைக்கப்படும் அக்னி பரீட்சை என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், ஐபிஎல் கோப்பையை பலராலும் ஒருமுறை கூட வெல்ல முடியாத நிலையில், ரோகித் சர்மா 5 முறை வென்றிருக்கிறார். 

அதனால் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ரோகித் சர்மாவுக்கு உண்மையான பரீட்சை அடுத்த 14 நாட்களில் நடக்கவுள்ளது.

இந்தியாவின் மிகச்சிறந்த 18 வீரர்கள் கொண்ட அணி ரோகித் சர்மாவுடன் உள்ளது. அவர்களை கொண்டு ரோகித் சர்மாவால் உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்றால், நிச்சயம அவர் கேப்டன்சி மீது சந்தேகம் எழுப்பப்படும். 

ஏனென்றால் 2007 மற்றும் 2019 ஆகிய உலகக்கோப்பை தோல்விக்கு ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி மீதான விமர்சனங்கள் எவ்வளவு தீவிரமாக இருந்தன என்பதை அனைவரும் அறிவோம்.

ஒருவேளை எதிர்வரும் உலககோப்பை தொடரில் இந்திய அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றால், ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பாதிப்பு ஏற்படும். 

ஆனால் இந்திய அணியால் நிச்சயம் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. இறுதிப்போட்டியில் யார் அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறார்களோ அவர்கள் வெற்றிபெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!