சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 11, 2024 - 14:09
சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாய் வழங்குவதற்கு 7 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தொழிலாளர் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையைக் கூட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமானால் விசேட சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!