தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

செப்டெம்பர் 10, 2024 - 11:35
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் செப்டம்பர் 11 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புலமைப்பரீட்சைக்கான ஊகத்தின் அடிப்படையிலான வினாக்கள் அடங்கிய வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கும் வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரீட்சை வினாப்பத்திரத்திலுள்ள வினாக்களை அல்லது அதற்குச் சமமான வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள் மூலம் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் பகிர்வதற்கும் முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!