எரிபொருள் விற்பனை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
இலங்கையில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எரிபொருளின் பாவனை 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இலங்கையில் சிபெட்கோ, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்த எரிபொருள் அளவு தொடர்பான தரவுகளை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கடந்த மார்ச் மாதத்தில் எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.