பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
பிறப்புச் சான்றிதழ் இல்லாமை காரணமாக தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்கு அதற்காக வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இல்லாமை காரணமாக தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்கு அதற்காக வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
அதன்படி, பிறப்புச் சான்றிதழ் இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
40 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள், கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டவர்கள், வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்தவர்கள், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெறாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.