18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அலுவலகம் நினைவுப்படுத்தியுள்ளது.

பெப்ரவரி 8, 2024 - 17:17
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் நினைவுப்படுத்தியுள்ளது.

பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என, அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது வீட்டில் இருப்பவர்களின் விவரங்கள் அவர்களது வீடுகளில் பெறப்படும் வாக்காளர் பட்டியலில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம்  அறிவுறுத்தி உள்ளார்.

அதற்கமைய, நிரந்தர வதிவிடத்தை மாற்றாதவர்கள், திருமணம், கல்வி அல்லது வேறு காரணங்களுக்காக வசிப்பிடத்தை மாற்றியவர்கள் அனைவரும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களால் வாக்களிக்க முடியாவிட்டாலும் அவர்களின் பெயர்களும் வாக்காளர் இடாப்பில் இடம்பெற வேண்டும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!