வாகன சாரதிகளுக்கான வெளியான முக்கிய அறிவிப்பு: புதிய நடைமுறை அறிமுகம்!
இரவு நேரங்களில் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரவு நேரங்களில் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்திலுள்ள இரவு நேர சேவைகளைக் கொண்ட தபால் நிலையங்களில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், சீதாவக்கபுர, கொட்டாஞ்சேனை, கொம்பனி வீதி, பொரளை, ஹெவ்லொக் டவுன், வெள்ளவத்தை, பத்தரமுல்ல மற்றும் நுகேகொடை தபால் நிலையங்களில் அபராதம் செலுத்தும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தெஹிவளை, கல்கிசை, மொரட்டுவை, பாணந்துறை மற்றும் களுத்துறை தபால் நிலையங்களிலும் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.