இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பில் நடைபெறவிருந்த இசைஞானி இளையராவின் இசை நிகழ்ச்சி அவரது மகளான பாடகி பவதாரிணியின் மறைவு காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.  

ஜனவரி 26, 2024 - 22:17
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பில் நடைபெறவிருந்த இசைஞானி இளையராவின் இசை நிகழ்ச்சி அவரது மகளான பாடகி பவதாரிணியின் மறைவு காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.  

ஜனவரி 27ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவிருந்த இளையராஜாவின் "என்றும் ராஜா ராஜாதான்" இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த இளையராஜா உட்பட பாடகர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டில் இருந்து கொழும்புக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், அதே நிகழ்வுக்கான புதிய திகதிகள் மிக விரைவில் அறியத்தரப்படும். 

ஏற்கெனவே ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வுக்கான டிக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டவர்கள், அதே டிக்கெட்டுக்களை புதிய திகதிகளிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மனம் வருந்துகிறோம் என குறிப்பிட்டுள்ளனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!