விலை அதிகரிப்பால் மீண்டும் முட்டை இறக்குமதி - வெளியான தகவல்
முட்டை இறக்குமதியில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதால் முட்டை இறக்குமதியில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
விலையை உயர்த்துவதற்காக சந்தைக்கு அனுப்பப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை உள்ளூர் உற்பத்தியாளர்கள் வேண்டுமென்றே மட்டுப்படுத்துவதாக வர்த்தக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முட்டை உற்பத்தியை கட்டுப்படுத்தவும், அதிக விலையை தொடர்ந்து பேணவும், உற்பத்தியாளர்கள் இறைச்சிக்காக கோழிகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நாளை (22) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, தற்போது நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில்