உலககோப்பை புள்ளி பட்டியல்.. ஆஸியை வீழ்த்தியும் பாகிஸ்தானுக்கு கீழ் சென்ற இந்தியா
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 52 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை பெற்றது.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 52 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை பெற்றது.
விராட் கோலியும் கே எல் ராகுலும் அபாரமாக நின்று இந்திய அணியில் 41.2 ஓவர்கள் எல்லாம் வெற்றி பெற வைத்தனர். இந்தியா 52 பந்துகள் எஞ்சிய நிலையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இது ரன் டேட்டில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஐசிசி வெளியிட்டுள்ள உலகக்கோப்பை புள்ளி பட்டியலை பார்த்த பிறகு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏனென்றால் இந்திய அணி 52 பந்துகள் எஞ்சிய நிலையில் வென்றும் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு கீழே இருக்கிறது.
ஆம் இந்திய அணி 0.88 ஆகிய ரன் ரேட் உடன் இரண்டு புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
இரண்டு புள்ளிகளுடன் முறையே முதலிடத்தில் 2. 14 ஆகிய ரன் ரேட் உடன் நியூஸ்லாந்தும், 2.04 ரன் ரேட் உடன் தென்ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் 1.62 ரன் ரேட் உடன் பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் ,1.43 ரன் ரேட் உடன் வங்கதேசம் நான்காவது இடத்திலும் இருக்கிறது.
இவர்களுக்கு கீழ்தான் தற்போது இந்தியா உள்ளது. இந்திய அணி இன்னும் விரைவாக வெற்றியை பெற்றிருந்தால் குறைந்தபட்சம் நான்காவது இடத்தையாவது பிடித்திருக்க முடியும்.
இந்த தொடரில் ரன் ரேட் எவ்வளவு பெரிய முக்கியம். ஏனென்றால் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள்தான் அரையிறுதிக்கு செல்ல முடியும்.
பல அணிகள் ஒரே புள்ளிகளுடன் இருந்து ரன் ரேட் அடிப்படையில் வெளியேறிய கதை எல்லாம் உலகக்கோப்பை வரலாற்றில் பலமுறை நடந்திருக்கிறது.