உன்னால தான் இப்படி ஆச்சு.. குல்தீப்பை வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மா

இந்தியா - இங்கிலாந்து மோதிய இந்தப் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 229 ரன்கள் மட்டுமே குவித்தது. 

ஒக்டோபர் 30, 2023 - 20:15
உன்னால தான் இப்படி ஆச்சு.. குல்தீப்பை வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மா

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியின் போது குல்தீப் யாதவ் ரிவ்யூ கேட்க வேண்டாம் என மறுத்ததால் இந்தியா விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை இழந்தது.

இதை அடுத்து கேப்டன் ரோஹித் சர்மா, களத்திலேயே குல்தீப் யாதவை வசை பாடினார். அதனால் குல்தீப் யாதவ் சோகமாக காணப்பட்டார். எனினும், அதன் பின் அவர் அதே பேட்ஸ்மேனின் விக்கெட்டை வீழ்த்தி செய்த தவறை சரி செய்தார்.

இந்தியா - இங்கிலாந்து மோதிய இந்தப் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 229 ரன்கள் மட்டுமே குவித்தது. 

அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது விரைவாக அந்த அணியின் விக்கெட்களை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்தியா.

கேப்டன் ரோஹித் சர்மா துவக்கத்தில் இருந்தே பரபரப்பாக இருந்தார். பும்ரா, ஷமி விக்கெட் வேட்டை நடத்தி இங்கிலாந்து அணியை 52 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். குல்தீப் யாதவ் ஜோஸ் பட்லர் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

அடுத்து மொயீன் அலி, லியாம் லிவிங்க்ஸ்டன் ஜோடி சேர்ந்து ரன் சேர்க்கத் துவங்கினர். இந்த ஜோடி பெரிதாக ரன் சேர்க்கும் முன் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்ற நிலையில், 22 வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்து லிவிங்க்ஸ்டன் காலில் பட்டது. 

ஆனால், பந்து அவர் முட்டிக்கு மேல் பட்டதாக குல்தீப் யாதவ் நினைத்தார். அம்பயர் அவுட் கொடுக்காத போது, ரிவ்யூ கேட்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருந்தது.

ஆனால், குல்தீப் யாதவ் பந்து மேலே சென்றதாக கூறவே, கேப்டன் ரோஹித் சர்மா ரிவ்யூ கேட்கவில்லை. ஆனால், அடுத்த ஓவரின் போது மைதானத்தில் இருந்த திரையில் ரீப்ளே காண்பிக்கப்பட்டது. 
அப்போது அந்த பந்து ஸ்டம்ப்பில் பட்டது தெரிந்தது. அப்போது இந்தியா ரிவ்யூ கேட்டு இருந்தால் அந்த விக்கெட்டை வீழ்த்தி இருக்கலாம்.

இதை அடுத்து கேப்டன் ரோஹித் சர்மா, குல்தீப் யாதவை அழைத்து சரியாக எல்பிடபுல்யூவை கணித்து இருக்க வேண்டாமா? என வசை பாடினார். எனினும், குல்தீப் லிவிங்க்ஸ்டன் விக்கெட்டை அடுத்த சில ஓவர்களில் வீழ்த்தினார். 

இந்தியா இந்தப் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. குல்தீப் யாதவ் இந்தப் போட்டியில் 8 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!