இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக ரோஹித் ட்ரிக்.. பயத்தில் இருந்து மீண்ட இந்திய வீரர்கள்!

இந்த உலகக்கோப்பை தொடரில் கூடுதல் ஸ்பின்னர் என்றால் அது அஸ்வின் தான். கூடுதல் வேகப் பந்துவீச்சாளர் வேண்டும் என்றால் ஷர்துல் தாக்குருக்கு தான் அணியில் வாய்ப்பு.

ஒக்டோபர் 19, 2023 - 15:33
இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக ரோஹித் ட்ரிக்.. பயத்தில் இருந்து மீண்ட இந்திய வீரர்கள்!

இந்திய அணி வீரர்கள் இந்த உலகக்கோப்பையில் மிகச் சிறப்பாக ஆடக் காரணமே கேப்டன் ரோஹித் சர்மாவின் குறிப்பிட்ட அணுகுமுறைதான் காரணம் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

இதற்கு முன் விராட் கோலி கேப்டன்சியில் இந்திய வீரர்கள் அணியில் எப்போது நீக்கப்படுவோம் என்பது தெரியாமல் பயத்தில் தவித்து வந்தனர். 

ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்றால் அணியில் இருந்து நீக்கப்படுவோமோ என்ற பயத்தில் இருந்தனர். அதனால் போட்டிகளில் அவர்களால் சரியாக செயல்பட முடியவில்லை.

ஆனால், ரோஹித் சர்மா கேப்டன்சியில் அந்த பயம் விலகி, நிலைமை அடியோடு மாறி இருக்கிறது. அணியில் யார், யாருக்கு என்ன வேலை, யாருக்கு அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கும், யாருக்கு சில போட்டிகளில் மட்டும் இடம் கிடைக்கும் என்பது தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது.

ரோஹித் சர்மாவின் இந்த அணுகுமுறையால் இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என கடந்த காலங்களில் குழப்பத்தில் இருந்த வீரர்களுக்கு தெளிவான மனநிலை ஏற்பட்டது. 

அதுமட்டுமின்றி, ரோஹித் சர்மா ஒவ்வொரு போட்டிக்கும், அணியை மாற்றிக் கொண்டே இருப்பதில்லை. அதிகபட்சம் கூடுதலாக ஒரு ஸ்பின்னர் வேண்டுமா? அல்லது வேகப் பந்துவீச்சாளர் வேண்டுமா? என்பதே அணியில் நடக்கும் மாற்றமாக உள்ளது. 

அதிலும் இந்த உலகக்கோப்பை தொடரில் கூடுதல் ஸ்பின்னர் என்றால் அது அஸ்வின் தான். கூடுதல் வேகப் பந்துவீச்சாளர் வேண்டும் என்றால் ஷர்துல் தாக்குருக்கு தான் அணியில் வாய்ப்பு.

முகமது ஷமி முக்கியமான வீரர் என்றாலும், அவர் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் காயத்தில் சிக்கினால் மட்டுமே அணியில் தேர்வு செய்யப்படுவார். இந்த தெளிவான முடிவு அனைத்து வீரர்கள் மனதிலும் அமைதியை கொடுத்துள்ளது. அதுவே அவர்களின் ஃபார்ம் உச்சகட்டத்துக்கு செல்லவும் உதவி இருக்கிறது.

விராட் கோலி கேப்டன்சியில் இல்லாத மற்றொரு விஷயம் , வீரர்கள் கேப்டனை எளிதாக அணுகுவது. ரோஹித் சர்மா எப்போதும் எளிதாக நடந்து கொள்கிறார். நகைச்சுவை உணர்வும் கொண்டவர். அதனால் மற்ற வீரர்கள் அவரிடம் நேரடியாக பேச எந்த தயக்கமும் இன்றி தங்கள் சந்தேகங்களை, குறைகளை கூறுகிறார்கள்.

இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா வந்த பின் படிப்படியாக வீரர்கள் மத்தியில் இந்த மாற்றம் ஏற்பட்டு, தற்போது உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் தங்களின் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வர உதவி இருக்கிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!