2024 ஆம் ஆண்டில் அரசுக்கு அதிகளவான வரி வருமானம்
இலங்கை வரலாற்றில் 2024 ஆம் ஆண்டிலேயே அதிக வரிவருமானம் பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் 2024 ஆம் ஆண்டிலேயே அதிக வரிவருமானம் பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் வரி வருமானம் 25.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் வரி வருமானமாக 1.56 ரில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் 1.95 ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டில் வருமான வரியாக 112.1 பில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதுடன் வற் வரியினுடாக 245.5 பில்லியன் ரூபாய் வருமானம் பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.