மாதுரு ஓயாவில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து
அனைத்து வீரர்களும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லாமல் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

இலங்கை விமானப்படையின் 7 ஆம் இலக்க படைப்பிரிவைச் சேர்ந்த பெல் 212 ரக ஹெலிகாப்டர் பயிற்சியின் போது மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.
சம்பவம் நடந்த நேரத்தில் எட்டு சிறப்புப் படை வீரர்களும் இரண்டு விமானிகளும் விமானத்தில் இருந்தனர்.
அனைத்து வீரர்களும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லாமல் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,