பிற்பகலில் பல பகுதிகளில் பலத்த மழை
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சில இடங்களில் 100 மில்லிமீட்டர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.