நாளை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும்; வெளியான அறிவிப்பு
நாட்டின் பல மாவட்டங்களில் நாளை (02) மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல மாவட்டங்களில் நாளை (02) மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
எனினும், கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற வானிலை தற்போது குறைந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
2,541 குடும்பங்களைச் சேர்ந்த 9,975 பேர் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.