வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.. சில பகுதிகளில் பலத்த மழை
தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலையிலும் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலையிலும் மழை பெய்யக்கூடும்.
மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடனான மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.