திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி ஹரிணி வழக்கு
ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செ ய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், பிரதிவாதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி மாவனெல்லை பிரதேசத்தில் நடைபெற்ற ஜக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்ட திஸ்ஸ அத்தநாயக்க, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அமையும் பட்சத்தில் தலதா பெரஹராவை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்ததாக, முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
பிரதிவாதி தன்னையும் தொடர்புபடுத்தி இந்தக் கருத்தை வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, அந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது, தவறானது என கூறியுள்ளார்.
இதன்மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதனால் பிரதிவாதியிடமிருந்து 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு அறவிட உத்தரவிடுமாறு மாவட்ட நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.