புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ
அமைச்சு பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமாகிய இடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சு பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமாகிய இடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவிக்கு ஹரின் பெர்னாண்டோவும் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார் ரொஷான் ரணசிங்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று(27) மாலை இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று பதவி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.