உலகக்கோப்பை தொடரில் இருந்தே நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா.. இளம் வீரர் சேர்ப்பு!
அவருக்கு பதிலாக இளம் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 19 குறைந்த ஓவர் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை தொடரில் இருந்தே இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நீக்கப்பட்டார். அவருக்கு பங்களாதேஷ் அணியுடனான போட்டியின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக இரண்டு உலகக்கோப்பை போட்டிகளில் அவர் ஆடவில்லை.
சிகிச்சை முடிந்து அரை இறுதிச் சுற்றுக்கு முன் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்புவார் என கூறப்பட்ட நிலையில், அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்தே நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
அவருக்கு பதிலாக இளம் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 19 குறைந்த ஓவர் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். முதல் நான்கு போட்டிகளில் அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக இருந்தார் ஆல் - ரவுண்டர் பாண்டியா. அவருக்கு பேட்டிங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எங்க ஆட்டம் இனி வெறித்தனமா இருக்கும்.. பாகிஸ்தான் நிர்வாகி மிக்கி ஆர்த்தர்!
இந்த நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்தை காலால் தடுக்க முயன்றார் பாண்டியா. அப்போது அவரது கணுக்காலில் பலத்த உள்காயம் ஏற்பட்டது. அப்போது வலியால் துடித்தார் ஹர்திக் பாண்டியா. அந்த போட்டியில் பாதியிலேயே வெளியேறினார்.
பின்னர் அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. பெங்களூரில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் அரை இறுதிக்கு முன் முழு உடற் தகுதி பெற்று இந்திய அணிக்கு திரும்புவார், உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால், கணுக்கால் காயம் ஏற்பட்டால் அத்தனை எளிதில் வேகப் பந்து வீச முடியாது.
முழு வேகத்தில் பந்து வீச அதிக நாட்கள் ஆகும் என வாசிம் அக்ரம் உள்ளிட்ட முன்னாள் வேகப் பந்துவீச்சாளர்கள் கூறினர். இந்த நிலையில், பாண்டியா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனாலும், அவர் பந்து வீச முடியாத நிலையே இருந்தது.
இந்த நிலையில், பிசிசிஐ அவரை உலகக்கோப்பை தொடரில் இருந்தே நீக்கி இருக்கிறது. அவருக்கு பதிலாக இளம் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.
தற்போது இந்திய அணி முழு பலத்துடன் ஆடி வரும் நிலையில், பிரசித் மாற்று வீரராக அணியில் தொடர்வார் என கூறப்படுகிறது.