ஆட்டத்தை ஆரம்பித்த குரு -  பணம், பெயர் புகழை சம்பாதிக்க உள்ள ராசிகள் இவர்கள்தான்!

தனாதிபதியான குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். நவம்பர் 27 வரை பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கக்கூடிய குரு, சில ராசியினருக்கு பல்வேறு நல்ல விஷயங்களை அள்ளித்தர உள்ளார்.

ஜுன் 22, 2023 - 21:57
ஆட்டத்தை ஆரம்பித்த குரு -  பணம், பெயர் புகழை சம்பாதிக்க உள்ள ராசிகள் இவர்கள்தான்!

குரு பெயர்ச்சி பலன்கள்

தனாதிபதியான குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். நவம்பர் 27 வரை பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கக்கூடிய குரு, சில ராசியினருக்கு பல்வேறு நல்ல விஷயங்களை அள்ளித்தர உள்ளார்.

மேஷ ராசி

மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குரு, அதில் உள்ள பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்கு மத்தான வெற்றி கிடைக்கும். தங்கள் தொழிலை மேம்படுத்த எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்கள். தொழிலதிபர்களும் தங்கள் வேலையை மேம்படுத்த, புதிய வாய்ப்புகளைப் பெறுவதில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் நீங்கள் நிறைய வருவாய் ஈட்டுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையும் அற்புதமாக இருக்கும்.

சிம்ம ராசி

குரு பரணியில் இருக்கும் காலத்தில் சிம்ம ராசியினருக்கு மிகவும் அற்புதமான பலன்களைப் பெற்றிடலாம். உங்கள் தொழிலில் அதிர்ஷ்டங்களும், மற்றவர்களின் முழு ஆதரவையும் பெற்றிட முடியும். அரசு தொடர்பாக வேலைகள் சிறப்பாக முடியும். உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கக்கூடிய காலமாக இருக்கும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் அமைப்பானது மிகவும் சிறப்பான பலனைத் தருவதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் பணி மற்றும் நிறுவனத்தை விரிவுபடுத்த இது ஒரு சிறந்த நேரம். இந்த நேரத்தில், உங்கள் நிதி நிலைமை மிகவும் முன்னேற்றம் தருவதாக இருக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே குருவின் அருளால் சிறப்பான பலன்கள் கிடைத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான நல்ல வாய்ப்புகள் பெற்றிட முடியும். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வேலை, புதிய திட்டங்களை தொடங்குவதில் சாதகமான காலமாக இருக்கும்.

மகர ராசி

குருவின் அருளால் மகர ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் நிம்மதியையும், கௌரவத்தையும் தரக்கூடியதாக இருக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்கள் சுப பலன்களைப் பெறுவார்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கும் பல லாப வாய்ப்புகள் கிடைக்கும், பதவி உயர்வும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் அதிகாரிகளின் கவனம் உங்கள் மீது இருக்கும். பணியால் உங்களின் சிறப்பான செயல்பாடுகளால் அவர்களை ஈர்க்க முடியும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!