இந்த அணியை மட்டும் வீழ்த்துவது கடினம்.. ஆனால் ஒரு பிரச்சினை... கிரேம் ஸ்மித் 

நடப்பு உலக கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் இந்திய அணி அனைத்திலும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. 

ஒக்டோபர் 31, 2023 - 01:18
இந்த அணியை மட்டும் வீழ்த்துவது கடினம்.. ஆனால் ஒரு பிரச்சினை... கிரேம் ஸ்மித் 

நடப்பு உலக கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் இந்திய அணி அனைத்திலும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. 

இந்த நிலையில் இந்தியாவை பாராட்டி பேசி உள்ள தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான விஷயம் என்று கூறியுள்ளார்.

இந்த தொடரில் இந்திய அணி தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. நடப்பு தொடரில் அவர்களை ஒரு அணி கூட நெருக்கடிக்கு ஆளாக்கவில்லை என்றே நான் சொல்வேன். 

நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவை 230 ரன்களுக்குள் சுருட்டியது. அப்போது வேண்டுமானால் முதல் முறையாக அவர்கள் நெருக்கடிக்கு ஆளானார்கள் என்று சொல்லலாம்.

எனினும் அது கடினமான ஆடுகளம் என்பது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது நமக்கு தெரிந்து விட்டது. இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான விஷயம். 

இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் அணியில் பேலன்ஸ் சரிசமமாக இருக்கிறது. அவர்களிடம் பந்து வீச்சுப்படை இருக்கிறது.

அதில் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் தற்போது குறையே இல்லை. அனைத்தையும் அவர்கள் பூர்த்தி செய்து விட்டார்கள். 

ஆனால் இந்திய அணியில் இருக்கும் ஒரே கவலை என்றால் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதால் கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர் வைத்து விளையாடுகிறார்கள். இதன் மூலம் சிறிய அளவில் இந்திய அணியின் சமநிலை இழந்திருக்கிறது.

ஏதேனும் ஒரு போட்டியில் இந்திய அணி மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகளை உடனடியாக இழந்தால் அப்போது அவர்கள் நிச்சயமாக ஒரு பேட்ஸ்மேனை வைத்து விளையாடி இருக்கலாம் என யோசிப்பார்கள். அந்தப் பணியை தான் ஹர்திக் பாண்டியா செய்தார். 

எனினும் ஐபிஎல் தொடரில் நாம் பார்க்கும் போது பல இளைஞர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி விளையாட வேண்டும் என்ற வலியை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

சொந்த மண்ணில் விளையாடுவதால் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி ஒரு எந்த பிரச்சனையும் இந்தியாவுக்கு இதுவரை வரவில்லை. இன்னும் அடுத்த பத்து நாட்கள் மிகவும் முக்கியமானது. இதில் யார் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!