புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியானது
தரம் 5 மாணவர்களுக்கான புலமைபரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தரம் 5 மாணவர்களுக்கான புலமைபரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் ( www.doenets.lk அல்லது https://www.results.exams.gov.lk/viewresultsforexam.htm ) பார்வையிட முடியும்.
கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சையில், 32,3900 பரீட்சார்த்திகள் தோற்றினர்.
அவர்களில், 31,9284 பேர் சித்தியடைந்துள்ளதாகவும், 51,244 பேர் வெட்டுப்புள்ளிக்கு அமைவாக சித்தி பெற்றுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சை தொடர்பாக மேன்முறையீட்டை ஜனவரி 27ஆம் திகதி முதல் பெப்ரவரி 06ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும்.