தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டது

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் இன்று(03) அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 3, 2023 - 23:50
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டது

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் இன்று(03) அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சார்த்திகளின் வருகைப் பதிவேடு பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதுவரை வருகைப் பதிவேடு கிடைக்கப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று பதிவேட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!