புலமைப்பரிசில் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) நடைபெறவுள்ள நிலையில், 3,37,596 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

ஒக்டோபர் 15, 2023 - 12:16
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) நடைபெறவுள்ள நிலையில், 3,37,596 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இந்த ஆண்டு 2,888 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சையில் மாணவர்கள் முதலில் இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க வேண்டுமென திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் லசிக சமரகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, உரிய நேரத்தில் மாணவர்களை பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனர்த்தங்கள் அல்லது அவசர நிலை காரணமாக பரீட்சை நிலையத்திற்கு வர முடியாத மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!