சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்
1.4 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார்.

1.4 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார்.
அத்துடன், அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் நிதி நெருக்கடி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“சம்பள உயர்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் கோரிக்கையை அடுத்து, சம்பள அதிகரிப்பின் ஒரு பகுதியை ஜனவரியிலிருந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் 1.4 மில்லியன் அரச ஊழியர்களுக்கு இந்த வருடத்தில் 10,000 ரூபாய சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.
அதில், 5,000 ரூபாய் சம்பளமாக அல்லது கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக ஆசிரியர்களின் சம்பளத்துக்கான பணம் ஏற்கெனவே திறைசேரிக்கு விடுவிக்கப்பட்டுள்ளது” என ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.