ஆபாச காணொளி; கூகுள் வழங்கிய தகவலின்படி கொழும்பில் இளைஞன் கைது 

2 வருடங்களாக 12 வயது சிறுமியை  பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 20, 2023 - 11:37
ஆபாச காணொளி; கூகுள் வழங்கிய தகவலின்படி கொழும்பில் இளைஞன் கைது 

2 வருடங்களாக 12 வயது சிறுமியை  பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் ஆபாசப் படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் நிறுவனம் இலங்கை பொலிஸாருக்கு புதிய முறையொன்றை அறிமுக்கப்படுத்தி உள்ளது.

இந்த புதிய முறையின் பிரகாரம் கொழும்பில் வசிக்கும் 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் உறவு முறையான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து கூகுள் டிரைவில் பதிவேற்றியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கூகுள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதல் கைது இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!