இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு
தங்கத்தின் விலை இன்று (10) 150,000 ரூபாயாக உயர்வடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கத்தின் விலை இன்று (10) 150,000 ரூபாயாக உயர்வடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக 148,000 ரூபாய் தொடக்கம் 149,000 ரூபாய் என்ற நிலையில் இருந்த நிலையிலேயே தங்கத்தின் விலை திடீர் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 150,800 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 163,000 ரூபாயாக காணப்படுகிறது.
இதேவேளை உலகச் சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 14 டொலரால்அதிகரித்து 1925.89 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.