ஒரு வருடமாக மாணவி துஷ்பிரயோகம் - 17 மாணவர்கள் கைது
இந்த குற்றச் செயலுக்கு உதவியை பெண்ணொருவரும் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனமல்வில பகுதியில் உள்ள பாடசாலையில் 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை சுமார் ஒரு வருடம் முழுவதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த 17 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த குற்றச் செயலுக்கு உதவியை பெண்ணொருவரும் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டிலிருந்து பல சந்தர்ப்பங்களில் மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான காணொளியை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மாணவியை சந்தேகநபர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
கைதான மாணவர்களின் பெற்றோர் குறித்த பகுதியில் சமூக ரீதியிலான குறிப்பிடத்தக்க அதிகாரங்களைக் கொண்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இதன்காரணமாக இந்த விடயம் பல நாட்களாக வெளிக்கொணரப்படவில்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.