துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமி பலி - பாட்டி மருத்துவமனையில்!
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகுலகம பகுதியில் நேற்றிரவு (பிப்ரவரி 27) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண்ணொருவரும் சிறுமியொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிறுமி உயிரிழந்துள்ளார்.
மகுலகம, ஹெட்டிபொல பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
தனது பாட்டியுடன் வீட்டில் தங்கியிருந்த சிறுமி, பன்றிகளை வேட்டையாட சிலர் கூச்சலிடுவதைக் கண்டு, அதனை பார்வையிட வெளியில் வந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.