சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
கல்வி நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உயர்தரத்தை தொடர விரும்பும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக தாமதமான பாடசாலை கல்வி பாடத்திட்டத்தை உள்ளடக்கும் கல்வி அமைச்சின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிர்காலத்தில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகள் போன்ற அரச பாடசாலை பரீட்சைகளின் காலவரையறையை வழமைபடுத்துவதற்கான அமைச்சின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் இது இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
பாடசாலை மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதியில் ஏற்படும் காலதாமதத்தை தடுப்பதற்காகவும் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.