உயர்தர பரீட்சைகள் தொடர்பில் முக்கிய தகவல் – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2026 ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2026 ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
டிட்வா சூறாவளியால் இடைநடுவில் பாதிக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்காக பரீட்சை அடுத்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி திறக்கப்படும் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 08 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.