நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ, சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெப்ரவரி 19, 2025 - 15:32
பெப்ரவரி 19, 2025 - 15:44
நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ, சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ மீது, சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த நபரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேட அதிரடிப்படையினர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,  கணேமுல்ல சஞ்சீவ இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!