வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தால் நாளை 

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான நாளை (04) வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

பெப்ரவரி 3, 2023 - 15:49
வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தால் நாளை 

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான நாளை (04) வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி பெப்ரவரி 4ம் திகதி கடைகள், வர்த்தக நிலையங்களை பூட்டி போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஹர்த்தால் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 4ம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!